உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / செங்கழுநீர் அம்மன் கோவில் திருப்பணி துவங்கியது

செங்கழுநீர் அம்மன் கோவில் திருப்பணி துவங்கியது

அரியாங்குப்பம் : வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் திருப்பணி சிறப்பு பூஜையுடன் துவங்கியது.அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினத்தில் செங்கழுநீர் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 2004ம் ஆண்டு கும்பாபிேஷகம் நடந்தது. 20 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் கும்பாபிேஷகம் நடத்த ஊர்மக்கள், கோவில் நிர்வாகத்தினர் கூட்டம் நடத்திமுடிவு செய்தனர்.அதையடுத்து, அம்மனுக்கு கலச ஸ்தாபனம் செய்து, சிறப்பு பூஜைகள் நடத்தி நேற்று காலை திருப்பணி துவக்க விழா நடந்தது. நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய் சரவணன் குமார், பாஸ்கர் எம்.எல்.ஏ.,அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், கோவில், நிர்வாக அதிகாரி சுரேஷ், வீராம்பட்டினம் முன்னாள் கவுன்சிலர் சக்திவேல்,திருப்பணிக்குழு தலைவர் மகாலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி