உள்ளூர் செய்திகள்

பிளம்பர் சாவு

புதுச்சேரி: ரத்த வாந்தி எடுத்து பிளம்பர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி சித்தன்குடி, முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகன், 44; பிளம்பர். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். குடிப்பழக்கம் உடைய முருகனுக்கு சர்க்கரை நோயும் இருந்தது. கடந்த ஒரு வாரமாக ஓட்டலில் அசைவ சாப்பாடு சாப்பிட்டு வந்தார். நேற்று முன்தினம் காலை வீட்டில் ரத்த வாந்தி எடுத்ததால், ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை