மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
4 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
4 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
4 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
4 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரி சிக்னல்களில் எல்லை கோட்டை தாண்டி, நிறுத்தப்படும் வாகன ஓட்டிகளை தடுப்பதற்காக, சாலைகளில் 'ஸ்டாப் லைன்' வரையும் பணி நடந்து வருகிறது.புதுச்சேரி, நகரப்பகுதிகளில் உள்ள சிக்னல்களை, தினசரி பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் கடந்து செல்கின்றனர். சில வாகன ஓட்டிகள், சிக்னல்களில் எல்லை கோட்டை தாண்டி, பொதுமக்கள் நடந்து செல்லும் வழியான, 'ஜீப்ரா கிராஸிங்' பகுதியில், விதிகளை மீறி, வாகனங்களை நிறுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன.இதை தடுப்பதற்காக, புதுச்சேரி போக்குவரத்து போலீசார் நகரப்பகுதி சிக்னல்களில் ஸ்டாப் லைன் வரையும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, இந்த கோடுகள் சாலைகளில் வரையப்பட்டிருந்தாலும், புதிதாக சாலைகள் போடும் போது, பெரும்பாலான கோடுகள் அழிந்து விட்டன. இதனால் புதிதாக, ஸ்டால் லைன் வரையும் பணி நடந்து வருகிறது.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago