மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
9 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
9 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
9 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
9 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று இரவு பெய்த கனமழையின் போது, வாய்க்காலில் தவறி விழுந்து தொழிலாளி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரியில் நேற்று இரவு 9:00 மணி முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. புதுச்சேரி ஜீவானந்தபுரம் பகுதியை சேர்ந்த அய்யப்பன் 40; என்பவர் இரவு 10:00 மணியளவில், வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். அருகில் இருந்த கழிவு நீர் வாயக்காலில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து மாயமானார்.தகவலறிந்த கோரிமேடு தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாய்க்காலில் விழுந்து மாயமான அய்யப்பனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12:00 மணியை கடந்தும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.இருப்பினும், அய்யப்பன் குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில், தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாய்க்காலில் விழுந்து மாயமான சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago