மேலும் செய்திகள்
3வது டி -20 கிரிக்கெட்: இந்தியா பவுலிங்
26 minutes ago
பாஜ தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமனம்
1 hour(s) ago | 1
புதிய கட்சி தொடங்கினார் ஓபிஎஸ்
3 hour(s) ago | 24
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் கலெக்டர் கார் மீது பைக்கால் மோத வந்த போதை ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, முள்ளிகிராம்பட்டு நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு கலெக்டர் சென்றபோது, எதிரே பைக்கில் வந்த இருவர், கலெக்டரின் காரில் மோதுவது போல் வந்தனர். அதனைக் கண்டு திடுக்கிட்ட கலெக்டரின் கார் டிரைவர் நிறுத்தினார். உடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பைக்கில் வந்த போதை ஆசாமிகள் இருவரை பிடிக்க முயன்றனர். அவர்களை பைக்கை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.பைக்கை பறிமுதல் செய்து, நெல்லிக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர். தப்பியோடிய இருவரை நெல்லிக்குப்பம் போலீசார் தேடிவருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
26 minutes ago
1 hour(s) ago | 1
3 hour(s) ago | 24