உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அய்யனாரப்பன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

அய்யனாரப்பன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

புதுச்சேரி : வில்லியனுார் அடுத்த கோர்க்காடு கிராமத்தில் உள்ள பூரணி பொற்கலை உடனுறை அய்யனாரப்பன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.இதையொட்டி, மாலை 4:00 மணிக்கு தட்டு வரிசை, பூணுால் போடுதல், சிறப்பு ஹோமம், மாலை மாற்றுதல் நிகழ்ச்சிள் நடந்தன. பின் மங்கள இசை முழங்க, அய்யனாருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.கோர்க்காடு மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் மற்றும் சீர்வரிசை அடங்கிய தாம்பூலம் வழங்கப்பட்டது. இரவு பூரணி பொற்கலை அய்யனாரப்பன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி