உள்ளூர் செய்திகள்

திருவிளக்கு பூஜை

அரியாங்குப்பம் : தவளக்குப்பம் புட்லாய் அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜையில் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.தவளக்குப்பம் அடுத்த தானாம்பாளையத்தில் புட்லாய் அம்மன் கோவில் உள்ளது. சித்திரை மாத விழாவையொட்டி, நேற்று மாலை விக்னேஸ்வர பூஜை. மகா லட்சுமி பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து, திருவிளக்கு பூஜை நடந்தது. இந்த பூஜையில், பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. கோவில் நிர்வாகத்தினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ