உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நோணாங்குப்பம் படகு குழாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்

நோணாங்குப்பம் படகு குழாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்

அரியாங்குப்பம்: நோணாங்குப்பம் படகு குழாமில், வார விடுமுறையையொட்டி, சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.புதுச்சேரிக்கு வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், கடலுார் சாலையில் உள்ள நோணாங்குப்பம் படகு குழாமில், படகு சவாரி செய்ய விரும்புகின்றனர். ஒவ்வொரு வார விடுமுறையான சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. அந்த வகையில் விடுமுறை தினமான நேற்று முன்தினம் மற்றும் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. படகு குழாமில், போதிய படகுகள் இல்லாமல் இருப்பதால், சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் படகு குழாம் மூலம் பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்து வருதால், சுற்றுலாத்துறை, படகு குழாமை மேம்படுத்தி, சுற்றுலா பயணிகளுக்கு போதிய படகுகள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்