மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவி: தி.மு.க., வழங்கல்
7 hour(s) ago
ஹாஸ் பீனிக்ஸ் விருதுகள் வழங்கல்
7 hour(s) ago
சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் தரிசனம்
7 hour(s) ago
அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்க பேரவைக் கூட்டம்
7 hour(s) ago
காரைக்கால், : காரைக்காலில் திருநங்கை துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.காரைக்கால், மஸ்தான் பள்ளி தெருவை சேர்ந்தவர் சக்திவேல்; இவரது இரண்டாது மகன் கணேசன், 24; அறுவை சிகிச்சை செய்துகொண்டு திருநங்கையாக மாறி யாழினி என்ற பெயரில் வலம் வந்தார்.பின், நாகப்பட்டினத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவரை கடந்த 2022ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார்.இருவரும் நிரவி தோமாஸ் அருள்திடல் அருகில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 15ம் தேதி சந்தோஷிற்கு வலிப்பு வந்து, காரைக்கால் அரசு மருந்துவமனையில் பரிசோதித்தபோது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது தெரிய வந்தது.மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட சந்தோஷ் கடந்த 20ம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் வேதனையடைந்த யாழினி நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அவர், ஏற்கனவே, கணவர் இறந்த சோகத்தால், தற்கொலை செய்துக்கொள்வதாகவும் தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என, உறவினர்களுக்கு யாழினி குறுஞ்செய்தி அனுப்பியது தெரியவந்தது. இதுக்குறித்து நிரவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago