உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரியில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி : முருங்கப்பாக்கம் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம் சார்பில், உலக காச நோய் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.சுகாதார உதவியாளர் கார்த்திகேயன் வரவேற்றார். மூத்த மருத்துவ அதிகாரி சீனிவாசன் தலைமை தாங்கினார். மேற்பார்வையாளர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார்.இதில், மருத்துவ அதிகாரி மேனகா பேசியதாவது: சர்க்கரை நோயாளிகள், புகை பிடிப்பவர்கள், மதுப்பழக்கம் உடையவர்களுக்கு காசநோய் தொற்று மிக எளிதில் பரவக்கூடியது. காசநோய் ஏற்பட்டால் மக்கள் பயம் கொள்ளாமல் மருத்துவரின் ஆலோசனைப்படி ஆறு மாதங்களுக்கு முறையாக மாத்திரைகளை சாப்பிட முற்றிலுமாக குணப்படுத்த முடியும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் எல்லா பரிசோதனைகளும், சிகிச்சைகளும் முற்றிலுமாக இலவசமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காசநோய் ஒழிப்பு திட்ட செவிலியர் ரேணுகாதேவி செய்திருந்தார். இதில், ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ