உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி, : தவளகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தேசிய காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கிராமப்புற செவிலியர் ஜெயசாந்தினி வரவேற்றார். நிலைய மருத்துவ அதிகாரிகள் மீனு, செல்வநாயகி தலைமை தாங்கி, காசநோய் பரவும் விதம் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து பேசினர். நோய்க்கான சிகிச்சை மருந்துகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.கிராமப்புற செவிலிய மேற்பார்வையாளர் பவுனம்பாள், சுகாதார உதவி ஆய்வாளர்கள் ஜவகர், இளஞ்செழியன், கவுன்சிலர் ஹரிதாஸ் முன்னிலை வகித்தனர். செவிலியர் கலாவதி நன்றி கூறினார்.தொடர்ந்து, மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ஆஷா பணியாளர்கள் சாந்தி, புவனா ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை