உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பஞ்சாயத்தார் தேர்வில் பிரச்னை தகராறில் இருவர் காயம்

பஞ்சாயத்தார் தேர்வில் பிரச்னை தகராறில் இருவர் காயம்

பாகூர்: மூ.புதுக்குப்பம் கிராமத்தில் புதிய பஞ்சாயத்தார் தேர்வு செய்வது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்தனர்.கிருமாம்பாக்கம் அடுத்துள்ள மூ.புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் புதியதாக பஞ்சாயத்து நிர்வாகிகள் தேர்வு செய்வது தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த மனோகர் 48; சத்தியநாராயணன் 40; உள்ளிட்டோர் அங்குள்ள கோவில் அருகே கூடி, புதிய பஞ்சாயத்து நிர்வாகிகளை தேர்வு செய்வது தொடர்பாக பேசி கொண்டிருந்தனர்.அப்போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் 40; என்பவர், யார் அனுமதியுடன் நீங்கள் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கிறீர்கள் என, கேட்டு தகராறு செய்தார். மேலும், மரக்கட்டையால் மனோகர், சத்தியநாராயணன் இருவரையும் தாக்கினார். காயமடைந்த இருவரும் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசில் அவர்கள் கொடுத்த புகாரில், சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை