உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கத்தியுடன் திரிந்த இருவர் கைது

கத்தியுடன் திரிந்த இருவர் கைது

வில்லியனுார் : வில்லியனுார் அருகே கத்தியுடன் திரிந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.வில்லியனுார் அடுத்த கூடப்பாக்கம் தாமரைகுளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இருவர் கத்தியுடன் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில் பத்துகண்ணு பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசார் தாமரைக்குளம் பகுதிக்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்ற இருவரையும் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்து, விசாரித்தனர்.அவர்கள், கூடப்பாக்கம், அம்பேத்கர் நகரை சேர்ந்த ஞானசவுந்தர், 29; புதுநகர் ராகுல், 25, என, தெரியவந்தது. அவர்களை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ