உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அடையாளம் தெரியாத நபர் சாவு

அடையாளம் தெரியாத நபர் சாவு

திருக்கனுார்: சோரப்பட்டு மெயின் ரோடு அருகே இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருக்கனுார் அடுத்த சோரப்பட்டு மெயின் ரோடு அருகே 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக திருக்கனுார் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷன் 0413-2688435 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை