உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பல்கலைக் கழகம் - காவல்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம்

பல்கலைக் கழகம் - காவல்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதுச்சேரி, : காவல் துறை, புதுச்சேரி பல்லைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.புதுச்சேரி போலீஸ் தொழில்முறை தரம் மற்றும் திறன் மேம்பாட்டில் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, காவல் துறை, புதுச்சேரி பல்கலைக் கழகத்துடன் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சன்வே ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில், போலீஸ் டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ், புதுச்சேரி பல்கலைக் கழக பதிவாளர் ராஜ்னீஷ் பூட்டானி ஆகியோர் கையெழுத்திட்டனர்.துணை வேந்தர் தரணிக்கரசு பேசுகையில், 'இளம் மாணவர்கள், ஆசிரியர்கள் காவல்துறை வழங்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வர். இதன் மூலம் பல்கலைக்கழக ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் போலீசுடன் பகிரப்படும்.போக்கவரத்து மேலாண்மை, டேட்டா மைனிங் மேம்பாடு, சைபர் கிரைம், தடய அறிவியல், முகம் அடையாளம் கண்டுபிடித்தல் ஆகியவற்றில் போலீசுடன் புதுச்சேரி பல்கலைக்கழகம் இணைந்து பணியாற்றும்' என்றார்.நிகழ்ச்சியில், போலீஸ் ஐ.ஜி., அஜித்குமார்சிங்லா, டி.ஐ.ஜி., பிரிஜேந்திரகுமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி