மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
13 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
13 hour(s) ago
புதுச்சேரி: இந்துக்களுக்கு எதிரான வங்க தேச வன்முறையை கண்டித்து, சட்டசபையில், தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, புதுச்சேரி பா.ஜ., கல்வியாளர் பிரிவு தலைவர் நாகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:வங்க தேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக பெரும் உள்நாட்டு கலவரம் நடை பெறுகிறது. பிரதமர் ேஷக் ஹசீனா ராஜினாமா செய்த பிறகு, அங்குள்ள சிறுபான்மை இந்துக்களை குறி வைத்து கலவரக்காரர்கள் வன்முறையில் காட்டுமிராண்டித்தனமாக ஈடுபடுகின்றனர்.பல இந்து மக்கள் வன்முறையாளர்களால், மிக கொடூரமான முறையில் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டுள்ளனர்.இந்துக்கோவிலான இஸ்கான் கோவில், காளி கோவில், பகவத்கீதை உள்ளிட்ட புனித தலங்கள், நுால்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் எரிக்கப்பட்டுள்ளன.புதுச்சேரியில் தற்போது நடக்கும் சட்டசபை கூட்டத்தொடரில் வங்கதேச இந்துக்கள், அங்கு படிக்கும் இந்திய மாணவர்களின் உயிருக்கும், சொத்துகளுக்கும் மத்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். வங்கதேசத்தில் நடக்கும் வன்முறையை கண்டித்து சட்டசபை கூட்டத் தொடரில் உடனடியாக தீர்மானம் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
13 hour(s) ago
13 hour(s) ago