உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உழவர்கரை ஜெயராக்கினி ஆலய பெருவிழா கொடியேற்றம்

உழவர்கரை ஜெயராக்கினி ஆலய பெருவிழா கொடியேற்றம்

புதுச்சேரி : உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில், 309ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துங்கியது.ஆலயத்தின் பெருவிழாவையொட்டி, திருப்பலி நடத்தப்பட்டது. தொடர்ந்து, ஜெயராக்கினி ஆலயத்தின் கொடியை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின், ஆலய பங்குதந்தை பால்ராஜ் தலைமையில், கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, கொடி மரத்தில் நேற்று காலை ஏற்றப்பட்டது.ஏராளமான கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர். தொடர்ந்து, காலை, மாலையில், திருப்பலிகள் நடக்கிறது. முக்கிய விழாவான வரும் 13ம் தேதி ஆடம்பர தேர்பவனி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை