புதுச்சேரி: உழவர்கரை நகராட்சியில்வீடு, நிறுவனங்களின் உரிமையாளர்கள், மலக்கசடு கழிவு நீர் தொட்டியை, ஆண்டிற்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும் என, ஆணையர் சுரேஷ்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். அவரது செய்திக்குறிப்பு: உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், திறந்தவெளி கால்வாயில் கழிவு நீர் செல்வதால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை தடுக்கவும், சுற்றுப்புற துாய்மையை மேம்படுத்தவும், பாதாள சாக்கடை வசதி பொதுப்பணித்துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு, பல மாதங்கள் ஆகியும், இதுவரை, பல குடியிருப்புகள், நிறுவனங்களில் உருவாகும் கழிவுநீர் பாதாள சாக்கடையில் இணைக்கப்படாமல் உள்ளது. இதனால் பாதாள சாக்கடை ஏற்படுத்தப்பட்ட நோக்கம் நிறைவேறாமல், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.எனவே, பாதாள சாக்கடை வசதிகள் உள்ள பகுதிகளில், வீடு மற்றும் நிறுவன உரிமையாளர்கள் பொதுப்பணித்துறையை அணுக வேண்டும்.மேலும் தங்கள் வீடு, நிறுவனங்களில், உருவாகும் கழிவுநீரை பாதாள சாக்கடையில் உடனடியாக இணைக்க வேண்டும். பாதாள சாக்கடை வசதி இல்லாத பகுதிகளில் உள்ள வீடு, நிறுவனங்களின் உரிமையாளர்கள், மலக்கசடு கழிவு நீர் தொட்டியை, ஆண்டிற்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்.அவ்வாறு கழிவுநீர் தொட்டியை, சுத்தம் செய்வதற்கு உழவர்கரை நகராட்சியின் சேவையை பெற, நகராட்சியின் சுகாதாரப்பிரிவில், 0413-2200382, எண்ணை தொடர்பு கொள்ளலாம்.மேலும், நகராட்சியின் அனுமதி பெற்ற, தனியார் கழிவுநீர் சுத்தம் செய்பவர்கள் கருப்புசாமி செப்டிக் டேங்க் கிளீனிங் - 9600661766; தீபக் செப்டிக் டேங்க் கிளீனிங் - 9500333985; ஸ்ரீ அம்மன் செப்டிக் டேங்க் கிளீனிங் - 9597552911; ரம்யா செப்டிக் டேங்க் கிளீனிங் - 9087935296; ஆகியோரை தொடர்பு கொண்டு அதற்குண்டான கட்டணத்தை செலுத்தி, பாதுகாப்பான முறையில், கழிவுநீர் தொட்டியை, சுத்தம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.