உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தடுப்பூசி செலுத்தினால் ரூ. 10 ஆயிரம் நிதி உதவி

தடுப்பூசி செலுத்தினால் ரூ. 10 ஆயிரம் நிதி உதவி

வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் மருத்துவ செலவினை புதுச்சேரி மருத்துவ நிவாரண சங்கத்தின் மூலம் திருப்பி அளிக்கப்படும். காமராஜர் நுாற்றாண்டு கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் குடிசை வீடுகளை கல்வீடுகளாக மாற்ற நிதி உதவி அளிக்கப்படும்.ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோவில்களை புனரமைக்க ரூ. 10 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும். புதுச்சேரி காரைக்காலில் நலிவடைந்த கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்த ரூ. 15 கோடி வழங்கப்படும். குழந்தைகளுக்கு 100 சதவீத தடுப்பூசி செலுத்தி கொள்வதை உறுதி செய்யும் பொருட்டு, 1 வருட தடுப்பூசி அட்டவணை படி அனைத்து தடுப்பூசி செலுத்தி கொள்ளும் புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட பெற்றோரின் குழந்தைகளுக்கு ரூ. 10 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ