உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை

விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை

புதுச்சேரி, : செல்லப்பெருமாள்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டை செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 225 மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்று நுாறு சதவீத சாதனை படைத்துள்ளனர். பள்ளி மாணவி மதிவதனி 600 மதிப்பெண்ணுக்கு, 592 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதல் இடம் பிடித்தார்.மாணவி ஹேமலதா 588 மதிப்பெண்களுடன் பள்ளி அளவில் 2வது இடமும், மாணவி அஃபிரின், 585 மதிப்பெண் பெற்று 3வது இடம் பிடித்தார். இப்பள்ளியில் 550 மதிப்பெண்களுக்கு மேல் 14 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 59 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 116 மாணவர்களும் பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இயற்பியல் பாடத்தில் ஒரு மாணவரும், கம்யூட்டர் சையின்ஸ் பாடத்தில் 6 பேரும், கம்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் 4 பேர், கணக்கு பதிவியல் பாடத்தில் ஒருவரும், வணிகவியல் பாடத்தில் 5 பேர், பிரஞ்சு மொழி பாடத்தில் 3 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 90 மதிப்பெண்களுக்கு மேல் தமிழ் பாடத்தில் 33 மாணவர்களும், இந்தி 4, பிரஞ்சு 21, ஆங்கிலம் 15, இயற்பியல் 14, வேதியலில் 32, உயிரியலில் 5, தாவரவியலில் 2, விலங்கியலில் 6, கம்யூட்டர் சையின்ஸ் 45, பொருளாதாரவியல் 16, வணிகவியல் 20, கணக்கு பதிவியல் 14, கணிதம் 9 , கம்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் 22 பேர் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர். சாதனை படைத்த பள்ளி மாணவ மாணவிகளை விவேகானந்தா கல்வி குழுமத்தின் தாளாளர் செல்வகணபதி எம்.பி., பள்ளி முதன்மை முதல்வர் பத்மா, பள்ளி முதல்வர் கீதா, பள்ளியின் மேற்பார்வையாளர் சுப்புலட்சுமி ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்தி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்