| ADDED : ஏப் 14, 2024 05:17 AM
திருக்கனுார்:மண்ணாடிப்பட்டுதொகுதியில் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து, சிறப்பு அழைப்பாளர் முத்தழகன் மற்றும் நிர்வாகிகள்திருக்கனுார் பகுதியில் ஓட்டு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.புதுச்சேரி லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பா.ஜ., வேட்பாளராக அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.அவரை ஆதரித்து மண்ணாடிப்பட்டு தொகுதியில் ஓட்டு சேகரிக்கும் பணி நேற்று துவங்கியது.திருக்கனுார் முத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து துவங்கப்பட்ட பிரசாரத்தில் பா.ஜ., மாநில சிறப்பு அழைப்பாளர் முத்தழகன், தொகுதி பொறுப்பாளர் கண்ணன், கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்று, திருக்கனுார் கிராமம் முழுவதும் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தனர்.