உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குளிர்பானத்தில் குளவி: விருதையில் பரபரப்பு

குளிர்பானத்தில் குளவி: விருதையில் பரபரப்பு

விருத்தாசலம் : மாதா கோவில் திருவிழாவில் கொடுத்த குளிர்பானத்தில் குளவி மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருத்தாசலம் அடுத்த அரசக்குழியில் உள்ள மாதா கோவில் தேர் பவனி சமீபத்தில் நடந்தது. இதற்காக அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் சிலர், பொது மக்களுக்கு குளிர்பானங்கள், டீ, பிஸ்கட் வழங்கினர். அதில், ஜேக்கப் அந்தோணி என்பவரின் குழந்தைக்கும் குளிர்பானம் வழங்கப்பட்டது. அதனை வீட்டிற்கு சென்று திறந்து பார்த்தபோது, குளவி இறந்து கிடந்தது.அதிர்ச்சியடைந்த ஜேக்கப் அந்தோணி, குளிர்பானத்தை கொடுத்த நபரிடம் கேட்டபோது, விருத்தாசலத்தில் உள்ள மொத்த வியாபாரியிடம் வாங்கியதாக கூறினார். பின்னர், தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்று பார்த்தபோது, பாதுகாப்பற்ற முறையில் திறந்தவெளியில் குளிர்பானம் தயாரிப்பது தெரிய வந்தது. இந்நிலையில் ஜேக்கப் அந்தோணியை சிலர் மிரட்டினர்.அதனைத் தொடர்ந்து ஜேக்கப் அந்தோணி, குளவி கிடந்த குளிர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அது, விருத்தாசலம் குழுக்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தரமற்ற குளிர்பானம் தயாரிப்பு நிறுவனத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விரைந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை