உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எங்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தேவை பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் மனு

எங்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தேவை பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் மனு

புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்களும், 3 சுயேச்சை எம்.எல்.ஏ., என மொத்தம் 33 பேர் உள்ளனர். இதில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என ஏறத்தாழ 90 சதவீத எம்.எல்.ஏ.க்கள், தங்கள் தொகுதிக்கு செல்லும்போது பாதுகாப்பு இல்லை என கூறி, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பெற்றனர்.ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுடனும், 2 ஷிப்ட் அடிப்படையில், போலீசார் துப்பாக்கியுடன் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சி நிகழ்ச்சி, அரசு விழாக்கள், தொகுதி மக்களின் திருமணம், காதணி விழா என அனைத்திற்கும் துப்பாக்கி ஏந்திய போலீசுடன் எம்.எல்.ஏ.க்கள் கெத்தாக வலம் வருகின்றனர்.இதில் பா.ஜ., சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான அசோக்பாபு, வெங்கடேசன் மற்றும் பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.வான சிவசங்கர் ஆகியோர் தங்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என டி.ஜி.பி., அலுவலகத்தில் கடிதம் அளித்தனர். முன்னதாக மூன்று எம்.எல்.ஏ.க்களும் கவர்னர் மாளிகை சென்று கவர்னர் ராதாகிருஷ்ணனை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை