உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓட்டுப் பதிவின்போது செய்யக் கூடாதது என்ன?

ஓட்டுப் பதிவின்போது செய்யக் கூடாதது என்ன?

புதுச்சேரி: ஓட்டுப்பதிவின்போது போலீசார்செய்யும் பணிகள் மற்றும் செய்ய கூடாத செயல்கள் குறித்து வடக்கு பிரிவு போலீசாருக்கு விளக்கும் ஆலோசனைகூட்டம் நேற்று நடந்தது.புதுச்சேரி தேர்தல் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக வடக்கு போலீஸ் பிரிவின் கீழ் இயங்க கூடிய கோரிமேடு, லாஸ்பேட்டை, ரெட்டியார்பாளையம், மேட்டுப்பாளையம், சேதராப்பட்டு, லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பு புறக்காவல் நிலையம் போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் வழுதாவூர் சாலை, தமிழ் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.எஸ்.பி., வீரவல்லவன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், வெங்கடாஜலபதி, சப்இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், ராஜேஷ், கலையரசன், அன்சர்பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 150 போலீசார் கலந்து கொண்டனர். அவர்களுக்கு, தேர்தல் பணியில் செய்ய வேண்டிய மற்றும் செய்ய கூடாத செயல்கள் குறித்த வழிகாட்டுதல் கையேடு வழங்கப்பட்டது.மேலும், ஓட்டுப்பதிவு நடைபெறும் இடத்தில் இருந்து 200 மீட்டர் துாரத்திற்கு வாகனங்கள் நிறுத்தவும், கட்சியினர் ஓட்டு சேகரிக்க அனுமதிக்க கூடாது. ஓட்டு அளிக்க வரும்போது, கட்சி சின்னம் கொண்டு வருவோரை தடுக்க வேண்டும்.கட்சி சின்னத்துடன் கொண்டு வரப்படும் பூத் சிலிப்பிற்கு அனுமதி வழங்க கூடாது.ஓட்டுப்பதிவு அறைக்குள் எக்காரணம் கொண்டும் செல்ல கூடாது. ஓட்டுப்பதிவு அதிகாரி அழைத்தால் மட்டுமே ஓட்டுப்பதிவு அறைக்குள் செல்ல வேண்டும். போலீசார் நடுநிலையுடன் செயல்பட்டு,எந்தவிதமான சட்டஒழுங்கு பிரச்னை ஏற்படாமல், அமைதியான ஓட்டுப்பதிவு நடைபெற சிறப்பான முறையில்பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை