உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மத்தியில் காங்., ஆட்சியில் இருந்தபோது ஏன் மாநில அந்தஸ்து பெற்றுத்தரவில்லை: நாராயணசாமிக்கு அன்பழகன் கேள்வி

மத்தியில் காங்., ஆட்சியில் இருந்தபோது ஏன் மாநில அந்தஸ்து பெற்றுத்தரவில்லை: நாராயணசாமிக்கு அன்பழகன் கேள்வி

புதுச்சேரி : புதுச்சேரியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் தமிழ்வேந்தனை ஆதரித்து அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன், உப்பளம் தொகுதியில் பேசியதாவது;30 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்., புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தரவில்லை.மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, மத்தியில் காங்., ஆட்சியில் கணக்குபிள்ளைபோல், மத்திய இணை அமைச்சராக நாராயணசாமி இருந்தபோது ஏன் மாநில அந்தஸ்து பெற்றுதரவில்லை.2008 ம் ஆண்டு ரங்கசாமியை முதல்வர் பதவியில் இருந்து நமச்சிவாயம் மூலம் பதவி நீக்கம் செய்து குறுக்கு வழியில் முதல்வர் ஆனார் வைத்திலிங்கம். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பணியிடங்களை நிரப்பாமல் மத்திய அரசுக்கு சரண்டர் செய்தவர் வைத்திலிங்கம். மத்திய அரசின் நிதியை முழுமையாக செலவு செய்யாமல் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பியவர் வைத்திலிங்கம்.காங்., தி.மு.க., கூட்டணி ஆட்சி இருண்டு ஆட்சி.தனது சொந்த விறுப்பு வெறுப்பிற்காக மாநில உரிமையை விட்டு கொடுத்தவர் நாராயணசாமி.3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று அனைத்து அதிகாரம் பெற்று கொடுத்தார்.மாநில அரசை விட கவர்னருக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் சென்று உரிமையை தாரை வார்த்தவர். இந்த வழக்கின் பிரதான வழக்கறிஞராக பொதுப்பணித்துறை லட்சுமிநாராயணன் வாதாடினார்.பா.ஜ., மற்றும் காங்., இரு கட்சிகளாலும் மாநில அந்தஸ்து வழங்க முடியாது. எனவே புதுச்சேரி மக்கள் இரு தேசிய கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அவர், பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ