உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகன்களுடன் மனைவி மாயம்; கணவர் புகார்

மகன்களுடன் மனைவி மாயம்; கணவர் புகார்

புதுச்சேரி: கோபித்து கொண்டு வீட்டை விட்டு, மகன்களுடன் சென்ற பெண் எங்கு சென்றுள்ளார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுச்சேரி, லட்சுமி நகர் அருகில் உள்ள மகாத்மா நகரை சேர்ந்தவர் ஷிபு,34: இவரது மனைவி சந்திரா (எ) மாலதி, 28; கணவன், மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்தது. இந்நிலையில், கணவரிடம் கோபித்து கொண்டு, அவர் தனது இரண்டு மகன்களை அழைத்து கொண்டு கடந்த 10ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றார். மாலை வரை வீட்டுக்கு வரததால், சந்தேகமடைந்த, அவரது கணவர், உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.இதுகுறித்து, அவர் கொடுத்த புகாரின் பேரில், டி. நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்