உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

புதுச்சேரி: குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.சென்னையைச் சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன், 40; பெயிண்டர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் வில்லியனுார் கணபதி நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான கோகுலகிருஷ்ணன் சரியாக வேலைக்கு செல்லாமல் சுற்றித் திரிந்து வந்தார். இதனை மனைவி எஸ்தர்ராணி கண்டித்தார்.இதனால் மனமுடைந்த கோகுலகிருஷ்ணன் நேற்று அதிகாலை அவரது அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை