மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
2 hour(s) ago
புதுச்சேரி : பிரதமரை ஒருமையிலும், நாகரீகம் இல்லாமலும் விமர்சனம் செய்த நடிகர் பிரகாஷ்ராஜ் மீது புதுச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்யாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரதமர் மோடியையும், பா.ஜ.,வையும் நடிகர் பிரகாஷ்ராஜ் கடுமையாக விமர்சித்து வருகிறார். பிரதமரை தெய்வமகன், டெஸ்ட் டியூப் பேபி என விமர்சித்த அவர், நேற்றுமுன்தினம் புதுச்சேரியில் நடந்த விழாவில் பிரதமரை ஒருமையில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ராஜிவ்காந்தி அறக்கட்டளை சார்பில், நேருவின் 60வது நினைவு நாளை முன்னிட்டு, 'நேருவின் தேசிய கொள்கைகள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் புதுச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரகாஷ்ராஜ், எந்தவித மரியாதையும் இல்லாமல் பிரதமரை அவன்... இவன்... என ஏகவசனத்தில் பேசினார். கன்னியாகுமரியில் பிரதமர் தியானம் மேற்கொண்டது குறித்தும் முகம் சுளிக்கும் வகையில் விமர்சனம் செய்தார்.பொது வெளியில் பேசும் போது, சபை நாகரீகம் இல்லாமலும், ஒருமையிலும் பிரதமரை விமர்சித்து பேசியது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.ஆனால், பிரதமரை இழிவுபடுத்தி பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு எதையும் புதுச்சேரி போலீசார்பதியவில்லை.கொள்கைரீதியாக நடிகர் பிரகாஷ்ராஜிக்கு கருத்துவேறுபாடு இருக்கலாம்; அது, தவறு இல்லை. ஆனால், பிரதமர் பதவி என்பது நாட்டின் மிக மிக உயர்ந்த பதவி; மிகவும் கண்ணியமான பதவியில் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், பிரதமர் பதவியில் இருப்பவரை, ஒருமையில் பேசி, தரம் தாழ்ந்து விமர்சிப்பதை ஒருபோதும் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.புதுச்சேரியில் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ.,வை சேர்ந்தவர் எம்.பி.,யாக உள்ளார். நியமன எம்.எல்.ஏ.,க்கள், ஆதரவு சுயேட்சை எம்.எல். ஏ.,க்கள் என ஒட்டு மொத்தமாக பா.ஜ.,வில் 12 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.பா.ஜ.,வை சேர்ந்தவர்கள் தான் சபாநாயகராகவும், அமைச்சர்களாகவும் உள்ளனர். போலீஸ் துறையை, பா.ஜ.,வை சேர்ந்த சீனியர் அமைச்சர் நமச்சிவாயம்வைத்திருக்கிறார்.இருந்தபோதும், பிரதமரை மரியாதை இல்லாமல் ஏக வசனத்தில் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட வில்லை. இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களிடமும் குறைந்தபட்சமாக விசாரணை கூட நடத்தப்படவில்லை.புதுச்சேரியில் வலுவாக கால்தடம் பதித்துள்ள பா.ஜ.,வினர், நடிகர் பிரகாஷ்ராஜின் பேச்சுக்கு இதுவரை எதிர்ப்புகூட தெரிவிக்கவில்லை. குறைந்தபட்சம் போலீசில் ஒரு புகார்கூட நேற்று வரை தரவில்லை.இதுபோன்ற சம்பவம், பா.ஜ., ஆளும் மற்ற மாநிலங்களில் நடந்திருந்தால், நடிகர் பிரகாஷ்ராஜ் மீது பல வழக்குகள் பாய்ந்து இருக்கும். இந்நேரம் கைது செய்து சிறையில் அடைத்திருப்பர்.ஆனால், புதுச்சேரியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது, பா.ஜ., அரசு மீது கடும் விமர்சனத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago