மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
26 minutes ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
26 minutes ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
37 minutes ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
38 minutes ago
புதுச்சேரி : புதுச்சேரியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தினை அரசு ஏற்படுத்தினால், சுற்றுலா வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்றாலும், கிரிக்கெட் இங்கு ஆழமாக பின்னிப் பிணைந்துள்ளது. பெரும்பாலான மக்களுக்கு கிரிக்கெட் மிகவும் பிடித்த விளையாட்டாக உள்ளது. இன்றை இளைஞர்களின் ஒரே விருப்பமாக கிரிக்கெட் மாறிவிட்டது. கிரிக்கெட் மட்டுமன்றி கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் மீதும் அவர்களுக்கு தனி ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு பிடித்த விளையாட்டு வீரர்களின் குடும்பம், கல்வி என அனைத்தையும் தெரிந்துக்கொள்ள ரசிகர்கள் விரும்புகின்றனர்.அந்த அளவிற்கு கிரிக்கெட்டையை மக்கள் நேசிக்கின்றனர்.புதுச்சேரியிலும் தெருவுக்கு தெருவுக்கு இளைஞர்கள், சிறுவர்கள் கிரிக்கெட் ஆடுகின்றனர். ஆனால் புதுச்சேரியில் அரசு சார்பில் சர்வதேச கிரிக்கெட் தரத்தில் கிரிக்கெட் மைதானங்கள் ஏதும் ஏற்படுத்தவில்லை. இந்திய அளவில் அதிகம் தேடப்படும் சுற்றுலா நகரமாக புதுச்சேரி மாறியுள்ளது. ஆனால் சர்வதேச கிரிக்கெட் தரத்தில் மைதானம் இல்லாததால் பெரும் குறைவாக இருந்து வருகின்றது.தனியார் கிரிக்கெட் மைதானங்கள் இருந்தாலும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ஏதும் இதுவரை புதுச்சேரியில் நடத்தப்படவில்லை. ரஞ்சி போன்ற போட்டிகள் தான் நடத்தப்பட்டு வருகின்றன.புதுச்சேரியில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கும்போது பல்வேறு நாடு, மாநிலங்களை சேர்ந்தவர்கள் கிரிக்கெட் பார்க்க குடும்பத்துடன் வருவர். இதன் மூலம் புதுச்சேரி விமான சேவையும் வலுபெருவதோடு, புதுச்சேரியின் சுற்றுலா வளர்ச்சியும் பல மடங்கு அதிகரிக்கும். ஓட்டல்கள், கடைகள் என அனைத்துமே நல்ல வியாபாரம் நடக்கும். சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானத்தை புதுச்சேரி அரசு முன்னெடுத்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
26 minutes ago
26 minutes ago
37 minutes ago
38 minutes ago