உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உயிர்காக்கும் காவலர்கள் 39 பேருக்கு பணி ஆணை

உயிர்காக்கும் காவலர்கள் 39 பேருக்கு பணி ஆணை

புதுச்சேரி : புதுச்சேரியில், உயிர்காக்கும் காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, நீச்சல் மற்றும் மீட்புப்பணிகளில் பயிற்சி பெற்ற, 39 உயிர் காக்கும் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த காவலர்களுக்கு பணி நியமன ஆணையை, சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி நேற்று வழங்கினார். பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், மீன்வளத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்த காவலர்கள் தலைமைச் செயலகம், லே கபே உணவகம், பார்க் கெஸ்ட் ஹவுஸ், பாண்டி மெரினா, வீராம்பட்டினம் ரூபி, சின்ன வீராம்பட்டினம் ஈடன், புதுக்குப்பம் பாரடைஸ், ஆகிய கடற்கரை பகுதிகளில் பணி அமர்த்தப்பட உள்ளனர். அனைத்து சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும், அரசு விடுமுறை நாட்களிலும் பணியில் ஈடுபட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை