மேலும் செய்திகள்
மகளிர் தினத்தை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி
19-Mar-2026
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
19-Mar-2026
பிரசார வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
19-Mar-2026
புதுச்சேரி : கோர்க்காட்டில் மின்சாரம் தாக்கி, கட்டட தொழிலாளி இறந்தார்.பண்ருட்டி அடுத்த மாணடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் காசிநாதன், 55. இவர் ஏம்பலம் அடுத்த கோர்க்காட்டில் நடந்து வரும் கட்டட பணிக்காக அதே பகுதியைச் சேர்ந்த குமார், மணவாளன் ஆகியோருடன் கடந்த 3 மாதமாக தங்கி, வேலை செய்தார்.நேற்று முன்தினம் மதியம் ஊழியர்கள் தங்கி வேலை செய்யும் அறையில் கிழே கிடந்த மின் ஒயரை காசிநாதன் சரி செய்தார். அப்போது மின்சாரம் தாக்கி காசிநாதன் துாக்கி வீசப்பட்டார். உடனே சக ஊழியர்கள் அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
19-Mar-2026
19-Mar-2026
19-Mar-2026