உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தற்கொலை

திருக்கனுார்: மனைவி பிரிந்து சென்றதால், மனமுடைந்த கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.காட்டேரிக்குப்பம் அடுத்த சந்தை புதுக்குப்பம், கர்ணம் தெருவை சேர்ந்தவர் குணசேகரன், 57; கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.செல்வராணி, கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை விட்டு பிரிந்து சென்று, கடந்த 4 மாதங்களாக சென்னையில் தங்கி வேலை செய்து வருகிறார்.மனைவி பிரிந்து சென்றதால், மனமுடைந்த காணப்பட்ட குணசேகரன், நேற்று முன்தினம் சந்தை புதுக்குப்பம் வீடூர் வாய்க்கால் அருகே வேப்ப மரத்தில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ