உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மணக்குள விநாயகர் கல்லுாரியில் உலக புத்தக தின விழா

மணக்குள விநாயகர் கல்லுாரியில் உலக புத்தக தின விழா

புதுச்சேரி, : மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், உலக புத்தக தின விழாவையொட்டி, நுாலகத்தை அதிக நேரம் பயன்படுத்திய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.மதகடிப்பட்டு, மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனை நுாலகத்துறை சார்பில், உலக புத்தக தின விழா, நேற்று கொண்டா டப்பட்டது. இந்த விழாவிற்கு மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், ஆகியோர் தலைமை தாங்கினர்.இந்த விழாவில், கடந்த கல்வியாண்டில், நுாலகத்தை அதிக நேரம் பயன்படுத்திய இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் டீன் காக்னே பரிசுகளை வழங்கி, மாணவர்களை பாராட்டி பேசினார்.கல்வி டீன் கார்த்திகேயன், ஆராய்ச்சி டீன் சஞ்சய், மருத்துவக்கண்காணிப்பாளர் பிரகாஷ், துணை மருத்துவ கண்காணிப்பாளர் கிரிஜா ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.இந்த விழாவில், நுாலக குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டை, கல்லுாரி நுாலகத்துறை சார்பில், நுாலகர் இளங்கோவன் மற்றும் நுாலக ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை