உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மணக்குள விநாயகர் கல்லுாரியில் உலக சுகாதார தின நிகழ்ச்சி

மணக்குள விநாயகர் கல்லுாரியில் உலக சுகாதார தின நிகழ்ச்சி

புதுச்சேரி: மதகடிப்பட்டு, மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உணவு மற்றும் ஊட்டச்சத்து துறையின் சார்பில், உலக சுகாதாரம் தினம் நிகழ்ச்சி நடந்தது.உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை தலைவர் கவிதா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் முத்துலட்சுமி நிகழ்ச்சியை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மருத்துவ அறிவியல் நிறுவன உணவு மற்றும் ஊட்டச்சத்து துறையின் தலைமை உணவியல் நிபுணர் மகிதா கலந்து கொண்டார்.அவர் மாணவர்கள் தினசரி உணவில் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு முறைகள் குறித்தும், ஆரோக்கியமில்லா துரித உணவுகளை உட்கொண்டால் ஏற்படும் உடல் உபாதைகள் மற்றும் உடல் உறுப்புகளின் சிதைவால் உண்டாகும் பல்வேறு நோய்கள் குறித்து விளக்கினார்.இது மாணவர்களிடையே, உணவு முறை குறித்த விழிப்புணர்வையும், தன்னம்பிக்கையையும், ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. தொடர்ந்து, கல்லுாரி மாணவிகளுக்கு உடல் மற்றும் மன ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட மாணவிகளிடம், உயரம், எடை, மன அழுத்தம், மற்றும் ரத்த அழுத்தம் குறித்து ஆராயப்பட்டது.உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை மாணவர்கள் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியையும் துறையில் ஏற்பாடு செய்திருந்தனர். இறுதியில் பேராசிரியர் மலர்விழி நன்றி கூறினார். நிகழ்ச்சியை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை