உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆடி அமாவாசையையொட்டி கோமாதா ஆலயத்தில் வழிபாடு

ஆடி அமாவாசையையொட்டி கோமாதா ஆலயத்தில் வழிபாடு

புதுச்சேரி: லாஸ்பேட்டை கோமாதா ஆலயத்தில் ஆடி அமாவாசையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.நமக்காக வாழ்நாள் முழுவதும் எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் உழைத்து மறைந்த நம்முடைய முன்னோர்களுக்கு திதி, திலதர்ப்பணம் செய்ய வேண்டும்.இதற்காக, லாஸ்பேட்டை கோமாதா ஆலயத்தில் ஆடி அமாவாசையையொட்டி நேற்று சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 6:30 மணி முதல் மதியம் 12:௦௦ மணி வரை கோபூஜை, அன்னதானம் நடந்தது. ராஜா சாஸ்திரி தலைமையில் இந்த பூஜைகள் நடந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை