உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜிப்மர் டாக்டர்கள் வண்ணம் பூசி போராட்டம்

ஜிப்மர் டாக்டர்கள் வண்ணம் பூசி போராட்டம்

புதுச்சேரி, : கோல்கட்டாவில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜிப்மர் டாக்டர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதனை தொடர்ந்து, நேற்று 9வது நாளாக, டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், டாக்டர்கள் நுாதன முறையில், கைகளில் வண்ணங்கள் பூசி கொண்டனர். பின்னர் டிஜிட்டல் பேனரில் கைகளில் இருந்த வண்ணங்களை பதிய வைத்து, படுகொலை செய்யப்பட்ட பெண் டாக்டருக்கு நீதி வழங்க வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ