உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 10 பேரிடம் ரூ. 8.60 லட்சம் அபேஸ்; சைபர் கிரைம் மோசடி கும்பல் அட்டூழியம்

10 பேரிடம் ரூ. 8.60 லட்சம் அபேஸ்; சைபர் கிரைம் மோசடி கும்பல் அட்டூழியம்

புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 10 பேரிடம் 8.60 லட்சம் ரூபாயை சைபர் கிரைம் ஆசாமிகள் அபகரித்துள்ளனர்.புதுச்சேரியைச் சேர்ந்த வெங்கடதாஸ் என்ற நபர், ஆன்லைன் லோன் செயலி மூலம் கடன் பெற்றார். கடன் தொகையை திருப்பி செலுத்தி முடித்த பின்பும், அவரை, மர்ம நபர் தொடர்பு கொண்டு அவரது புகைப்படத்தை மார்பிங் முறையில் மாற்றி அனுப்பி வைத்து பணம் கேட்டு மிரட்டினார். பின், வெங்கடேஷ்தாஸ் மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் 46 ஆயிரம் ரூபாய் செலுத்தினார். இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.அதேபோல் புதுச்சேரி சஞ்சய் என்ற வாலிபர் டிரீம் 11 என்ற ஆன்லைனில் கிரிக்கெட் போட்டி மீது பந்தையம் கட்டும் விளையாட்டு விளையாடினார். அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், அதிக பணம் கிடைக்க முதலீடு செய்ய வழி கூறினார். அதை நம்பி மர்ம நபரின் வங்கி கணக்கில் 81 ஆயிரம் செலுத்தி ஏமாந்தார்.புதுச்சேரி கலா என்ற பெண்ணுக்கு, வங்கியில் இருந்து கடன் கிடைத்துள்ளது என கடிதம் வந்தது. கடிதத்தில் குறிப்பிட்ட நபரை தொடர்பு கொண்டபோது, கடன் பெற 6,470 ரூபாய் செலுத்தி ஏமார்ந்தார். புதுச்சேரி ரத்தினவேல் என்பவருக்கு பரிசு பொருள் வந்துள்ளதாகவும், அதற்கு 7,740 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என மர்ம நபர் கூறினார். அதை நம்பி பணம் அனுப்பி ஏமார்ந்தார். புதுச்சேரி மதுமிதா என்ற பெண்ணை இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்ட மர்ம நபர், லேப்டாப், மொபைல் போன்கள், ஹெட்போன் உள்ளிட்ட உதிரி பாகங்கள் குறைந்த விலைக்கு கிடைப்பதாக தெரிவித்தார். அதை நம்பி, அவர், 3.20 லட்சம் ரூபாய் செலுத்தி ஏமார்ந்தார். புதுச்சேரி குமரசேனை தொடர்பு கொண்ட மர்ம நபர், வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, அவரது வங்கி கணக்கில் இருந்து 8,311 ரூபாயை எடுத்துள்ளார்.அதே போல், குகன் என்ற வாலிபரை தொடர்பு கொண்ட மர்ம நபர், துணிகள் விற்பனை செய்யும் இணையதளத்தில் பொருட்களை வாங்கி விற்கும் டாஸ்க் அளித்து, 93 ஆயிரம் ரூபாய் பெற்று ஏமாற்றினார்.சோபனா என்ற பெண், டெலிகிராம் செயலி மூலம் பணம் சம்பாதிக்கலாம் என, மர்ம நபர் கூறியதை நம்பி, ரூ. 3.4 லட்சம் பணம் செலுத்தி ஏமாந்தார். நேற்று முன்தினம் ஒரே நாளில் 10 பேரிடம் சைபர் கிரைம் மோசடி கும்பல் ரூ. 8.60 லட்சம் பணத்தை அபேஸ் செய்துள்ளனர். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை