உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 100 சதவீதம் ஓட்டுப்பதிவு; மாணவர்கள் பிரசாரம்

100 சதவீதம் ஓட்டுப்பதிவு; மாணவர்கள் பிரசாரம்

புதுச்சேரி : புதுச்சேரியில் கல்லுாரி மாணவர்கள் இருவர் ஓட்டு அளிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி, அம்பேத்கர் சட்டக் கல்லுாரியை சேர்ந்த மாணவர்கள் யுவராஜா, சுபாஷ். இருவரும், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை மற்றும் தலைமை செயலகம் எதிரே, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, பொதுமக்களிடம் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து கல்லுாரி மாணவர் யுவராஜா கூறுகையில், 'முதல் முறை வாக்காளர்களிடம் ஓட்டளிப்பதின் அவசியம் குறித்து நாங்கள் இருவரும் எடுத்து கூறினோம்.தற்போது, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பிரசாரத்தில் ஈடுபட்டோம். பொதுமக்களிடம் வாக்காளர் அடையாள அட்டை பெற வேண்டிய தேவை மற்றும் வரும் தேர்தலில், தவறாமல் ஓட்டளிக்க வலியுறுத்தினோம். புதுச்சேரியில், வரும் லோக்சபா தேர்தலில், 100சதவீதம் ஓட்டுப்பதிவு செய்யப்பட வேண்டும் என்பது எங்கள் நோக்கம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை