மேலும் செய்திகள்
சாத்தனுார் அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்
17-Nov-2024
சாத்தனூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு
01-Dec-2024
திருக்கோவிலூர்: பெஞ்சல் புயல் காரணமாக சாத்தனூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, அணையில் இருந்து வினாடிக்கு 18,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.'பெஞ்சல்' புயல் காரணமாக கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாத்தனூர் அணைக்கு நேற்று மாலை 4:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 18,500 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. 119 அடி, அதாவது 7,321 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில், 118.05 அடி, 7,108 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து வினாடிக்கு 19,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் இணையும் துரிஞ்சல் ஆற்றில் இருந்து வினாடிக்கு 5000க்கும் அதிகமான கன அடி நீர் சேர்வதால் தென்பெண்ணை ஆற்றில் இரு கரையும் தொட்டுக்கொண்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
17-Nov-2024
01-Dec-2024