உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / "கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் கட்சி காங்கிரஸ்": புதுச்சேரியில் கார்கே பிரசாரம்

"கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் கட்சி காங்கிரஸ்": புதுச்சேரியில் கார்கே பிரசாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுச்சேரி: 'கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் கட்சி காங்கிரஸ்' என அக்கட்சி தலைவர் கார்கே கூறினார்.புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்தில் கார்கே பேசியதாவது: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுப்போம் என பா.ஜ., தேர்தல் அறிக்கையில் கூட கூறவில்லை. மத்திய பா.ஜ., அரசு புதுச்சேரி மக்களை புறக்கணிக்கிறது. புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை நாங்கள் திறப்போம்.

மாநில அந்தஸ்து

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தருவதாக ராகுல் உறுதி அளித்துள்ளார். புதுச்சேரியில் கவர்னரை வைத்து காங்கிரஸ் அரசுக்கு பா.ஜ.,வினர் தொல்லை கொடுத்தனர். பிரதமரிடம் சரணடைந்துவிட்ட ரங்கசாமியை பார்த்து பரிதாபப்படுகிறேன். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் கட்சி காங்கிரஸ்.

மோடியின் கேரன்டி பொய்

444 எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கியவர் பிரதமர் மோடி. பா.ஜ., கொள்கையை ஏற்காத அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு தொல்லை கொடுக்கும் வேலையை பா.ஜ., செய்து வருகிறது. தேர்தலை சந்திக்காமல் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வருவது தான் பா.ஜ.,வின் வேலை. பிரதமர் மோடி எந்த கேரண்டி கொடுத்தாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்கள் நம்ப தயார் ஆக இல்லை. பிரதமர் மோடியின் கேரன்டி பொய். இவ்வாறு அவர் பேசினார்.

காங்கிரசை அழிக்க முயற்சி

இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் கார்கே கூறியிருப்பதாவது: ' தமிழகத்தில் கூட்டணி கட்சிகளின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார். பிரதமர் மோடி எங்கு சென்றாலும், காங்கிரசை குறை கூறுகிறார். காங்கிரஸ் கட்சியை அழிக்க நினைக்கிறார்கள்'. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

spr
ஏப் 16, 2024 00:11

சொல்வதற்கு முன்பாக "ஆட்சிக்கு வந்தால்" என்ற சொற்றோடர்களைச் சேர்த்திருக்க வேண்டும் அதற்கு வாய்ப்பில்லாத போது, "தேர்தலில் நாங்கள் வென்றால்" என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும் இவர்களுக்கு வாக்களிப்பவர்கள் இளிச்சவாயர்கள் என்றெண்ணுகிறார்கள்


Ramesh Sargam
ஏப் 15, 2024 20:58

முதலில் சோனியா உங்களுக்கு பேச்சு உரிமை கொடுப்பாரா என்று பாருங்கள்


M Ramachandran
ஏப் 15, 2024 20:38

ஆமாம் நம்பிட்டோம்


M Ramachandran
ஏப் 15, 2024 20:23

கான்க்ரீசை அழிக்க யாரும் முயர்ச்சி செய்ய தேவையில்லை ராகுல் மட்டும் மே போதும்


BALASUBRAMANIAN
ஏப் 15, 2024 18:00

இப்படி சொல்லுவது எல்லாம் காங்கிரஸ் காரங்க மட்டும் தான் வேற யறையாலும் முடியாது


BALASUBRAMANIAN
ஏப் 15, 2024 18:00

இப்படி சொல்லுவது எல்லாம் காங்கிரஸ் காரங்க மட்டும் தான் வேற யறையாலும் சொல்ல முடியாது


BALASUBRAMANIAN
ஏப் 15, 2024 18:00

இப்படி சொல்லுவது எல்லாம் காங்கிரஸ் மட்டும் தான்


M Ramachandran
ஏப் 15, 2024 17:37

நேரம் நல்ல நேரம் ரீல் விட்டுகாதில் பூ சுத்தும் நேரம்


S.V.Srinivasan
ஏப் 15, 2024 16:47

இங்க திராவிட மாடல் காதுல பூ சுத்தறது போதாதுன்னு நீங்களும் சேர்த்து சுத்தறீங்களா சுத்துங்க சுத்துங்க கேக்கறவன் கேனயனா இருந்த கேழ்வரகுல நெய் வருதும்பாங்க அந்த கதைதான்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை