உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு மருத்துவ கல்லுாரியில் ராகிங் 5 சீனியர் மாணவர்கள் சஸ்பெண்ட்

அரசு மருத்துவ கல்லுாரியில் ராகிங் 5 சீனியர் மாணவர்கள் சஸ்பெண்ட்

புதுச்சேரி : புதுச்சேரி மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவ கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களை 'ராகிங்' செய்த சீனியர் மாணவர்கள் 5 பேரை கல்லுாரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.புதுச்சேரி கோரிமேட்டில் மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பி.டி.எஸ்., படித்து வருகின்றனர்.கடந்த வாரம் கல்லுாரி விடுதியில் தங்கியிருந்த முதலாமாண்டு மாணவர்களின் அறைக்கு சீனியர் மாணவர்கள் சென்று 'ராகிங்' செய்தனர். இதுகுறித்து முதலாமாண்டு மாணவர்கள் அளித்த புகாரின் பேரில், கல்லுாரி நிர்வாகம் விசாரணை நடத்தியது.அதில், சீனியர் மாணவர்கள் 5 பேர் ராகிங் செய்தது உறுதியானதை தொடர்ந்து, அவர்களை சஸ்பெண்ட் செய்து கல்லுாரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை