உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண் குறித்து அவதுாறு வீடியோ வெளியிட்டவர்கள் மீது வழக்கு 

பெண் குறித்து அவதுாறு வீடியோ வெளியிட்டவர்கள் மீது வழக்கு 

புதுச்சேரி: பெண் குறித்து அவதுாறு பரப்பும் வகையில் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரியைச் சேர்ந்த பாதிரியர் ஒருவர், 17 வயது சிறுமியுடன் காரில் சென்றதாக சமூக வலைத்தளத்தில் வீடியோ மற்றும் தகவல் பகிரப்பட்டது. இந்நிலையில், பாதிரியாருடன் காரில் சென்றதை சில மர்ம நபர்கள் வழிமறித்து தடுத்து வீடியோ எடுத்து, அதனை அவதுாறான கருத்துக்களுடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாக, 21 வயது பெண் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.வீடியோ பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புகாரில் தெரிவித்து இருந்தார். உருளையன்பேட்டை போலீசார், இந்திய தண்டனை சட்டம் 341 பிரிவின் கீழ் சட்ட விரோதமாக வழிமறித்து தடுத்தல், 509 பிரிவின் கீழ் பெண்ணை மானபங்கம் செய்யும் செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்