உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலை விபத்தில் வாலிபர் பலி

சாலை விபத்தில் வாலிபர் பலி

பாகூர் : பைக்கில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த கூலி தொழிலாளி உயிரிழந்தார். அரியாங்குப்பம் காக்காயன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் இளங்கோ மகன் விக்னேஷ் 23; கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 9. 30 மணியளவில் தனது பைக்கில் வீட்டில் இருந்து அரியாங்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஓவியப் பள்ளி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையில் சறுக்கி சென்றது. இதில், நிலை தடுமாறி இழே விழுந்த விக்னேஷ், சாலையோரம் இருந்த சிமென்ட் கட்டையில் மோதி படுகாயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ