காங்., டூ என்.ஆர் காங்.,
புதிய அமைச்சராக பதவியேற்ற என்.ஆர்., காங்.,எம்.எல்.ஏ., திருமுருகன் காங்., கட்சியை சேர்ந்த மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., நளமகாராஜனின் மகன் ஆவார்.காங்., கட்சியில் தனது அரசியல் பயணத்தை துவங்கிய இவர் காரைக்கால் மாவட்ட இளைஞர் காங்., தலைவராகவும், பி.சி.சி உறுப்பினராகவும், காரைக்கால் மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.1972ம் ஆண்டு பிறந்த இவர் பி.ஏ சமூகவியல் படித்துள்ளார்.திருமணமான இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.திருமுருகன், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்து 2011, 2016, 2021 ஆகிய சட்டசபை தேர்தல்களில் காரைக்கால் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது காரைக்கால் மாவட்ட என்.ஆர்.காங்கிரஸ் தலைவராகவும் இருந்து வருகிறார். முதல்வர் ரங்கசாமியிடம் நான்குமுறை ஆசி
முதல் ரங்கசாமி ராஜ்நிவாசில் வந்து காரில் வந்து இறங்கியது அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.பதவி ஏற்பதற்கு முன்பும்,ஏற்ற பிறகும் முதல்வர் ரங்கசாமி காலில் விழுந்து ஆசி பெற்றார்.அடுத்து முதல்வர் ரங்கசாமி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தபோதும் மற்றொரு முறை அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். சாமி பேனாவில் கையெழுத்து
புதிய அமைச்சராக பதவி ஏற்கும் வகையில் காலை 10.42 மணியளவில் திருமுருகன் கையெழுத்திட கவர்னர் மாளிகை சார்பில் பேனா வைக்கப்பட்டு இருந்தது.அதனை தவிர்த்த திருமுருகன், சாமி முன் வைத்து படைத்த பேனாவை கையில் எடுத்து,சிறிது காத்திருந்தார்.அதனை கண்ட முதல்வர் ரங்கசாமி நல்ல நேரம் தானே கையெழுத்திடலாமே என்று கேட்க,சில நிமிடங்கள் பொறுத்திருந்த திருமுருகன் 10.45 மணியளவில் தனது பேனாவால் கையெழுத்திட்டு பதவி ஏற்றுக்கொண்டார்.