மேலும் செய்திகள்
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
18 hour(s) ago
வாலிபர்கள் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு பதிவு
18 hour(s) ago
அரசு பள்ளியில் கழிவறை திறப்பு
18 hour(s) ago
வாய்க்கால் அமைக்கும் பணி
18 hour(s) ago
புதுச்சேரி : தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க., வினர் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.உப்பளம் தொகுதியில், கடந்த 20ம் தேதி, பாதர் சாஹீப் வீதியில் திறந்து கிடந்த பாதாள சாக்கடையில் விழுந்த 6 வயது சிறுவனை அவரது தாய் காப்பாற்றினார். இச்சம்பவத்தில் அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன், தி.மு.க. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தரப்பிற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க.வினர் நேற்று முன்தினம் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் முன்பு போராட்டம் நடத்தி மனு அளித்தனர். இந்த நிலையில், புதுச்சேரி அ.தி.மு.க., அவைத் தலைவர் அன்பானந்தம் தலைமையில், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், மாநில துணை தலைவர் ராஜாராமன் முன்னிலையில் அக்கட்சியினர் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தை நேற்று காலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்பு இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதியிடம் புகார் மனு அளித்தனர்.முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் கூறுகையில், 'உப்பளம் சம்பவம் தொடர்பாக சபாநாயகர், ஒதியஞ்சாலை போலீசில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் புகார் அளித்துள்ளனர். தி.மு.க.வின் சட்டவிரோத செயல்களை வெளியில் கூறும் அ.தி.மு.க., மாநில செயலாளர் மீது திட்டமிட்டு பொய் புகார் அளித்துள்ளனர். பொய் புகார் கூறிய அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அ.தி.மு.க., மாநில செயலாளர் அளித்துள்ள புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க ஒதியஞ்சாலை போலீசாரிடம் தெரிவித்துள்ளோம் என கூறினார்.முற்றுகை போராட்டத்தில் கட்சியின் மாநில இணைச் செயலாளர் கணேசன், வீரம்மாள், திருநாவுக்கரசு, பொருளாளர் ரவிபாண்டுரங்கன், துணை செயலாளர் குணசேகரன், கருணாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago