உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏ.ஜே., சி.பி.எஸ்.இ., பள்ளி விழிப்புணர்வு பேரணி

ஏ.ஜே., சி.பி.எஸ்.இ., பள்ளி விழிப்புணர்வு பேரணி

புதுச்சேரி: தவளக்குப்பத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.தவளக்குப்பம் அடுத்த டி.என்., பாளையம் ஏ.ஜே., சி.பி.எஸ்.இ., பள்ளியில் போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு பேரணி துவக்க விழா நடந்தது. எஸ்.பி., மோகன்குமார் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கணேசன், பள்ளி முதல்வர் ரங்கநாதன், உள்பட பலர் கலந்து கொண்டனர். அரவிந்த் கண் மருத்துவமனையில் இருந்து துவங்கிய விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய பங்கேற்றனர்.முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணியில் தலைகவசம் அணிய வேண்டும்.அதி வேக பயணம் ஆபத்தானது என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை