உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடலில் மூழ்கி ஆந்திர மாணவர் பலி 

கடலில் மூழ்கி ஆந்திர மாணவர் பலி 

புதுச்சேரி: கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்தபோது மாயமான ஆந்திர கல்லுாரி மாணவர் உடல் நேற்று முத்தியால்பேட்டையில் கரை ஒதுங்கியது. ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் இ.சி.இ. மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் 18 பேர் தங்களின் பேராசிரியருடன் நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு தந்திராயன்குப்பம் கடலில் மாணவர்கள் குளித்தபோது, திருப்பதி, பைடு பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விஜயக்குமார் மகன் தனுஷ், 19; என்ற மாணவர் கடல் அலையில் சிக்கி மாயமானார். உடன் குளித்த மாணவர்கள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து தேடினர். இந்த நிலையில், கடலில் மூழ்கி மாயமான கல்லுாரி மாணவர் தனுஷ் உடல் நேற்று மாலை முத்தியால்பேட்டை சோலை நகர், தெற்கு பகுதியில் பாறைகளுக்கு இடையே கரை ஒதுங்கியது. முத்தியால்பேட்டை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி