மாணவர்கள் ஊக்க தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
புதுச்சேரி: புதுச்சேரி பிரதேச துளுவ வேளாளார் எஜூகேஷனல் அண்டு சாரிடபுள் டிரஸ்ட், புதுச்சேரி மற்றும் காரைக்கால் துளுவ வேளாளார் நலசங்கம் மற்றும் புதுச்சேரி துளுவ வேளாளார் திருமண தகவல் மையம் இணைந்து தங்க காசு, ஊக்கப் பரிசு, சான்றிதழ் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சாரம் சங்க அலுவலகத்தில் வரும் அக்டோபர் 2ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் துளுவ வேளாளார் நல சங்க மாநில தலைவர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் அறிக்கை: துளுவ வேளாளார் சமுதாயத்தை சார்ந்த 10ம் வகுப்பு, பிளஸ் 2, சி.பி.எஸ்.இ., 10ம் மற்றும் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தங்க காசு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் முன் பதிவு செய்யும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ், பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. மாணவர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ரேஷன் கார்டு நகல் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை வரும் செப்டம்பர் 20ம் தேதிக்குள் ராஜலட்சுமி இல்லம், 45 முதல் தெரு, புதுசாரம், புதுச்சேரி அல்லது 433, காமராஜர் சாலை, பழைய சாரம், சிக்னல் அருகில், புதுச்சேரி என்ற அலுவகலத்தில் கொடுத்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.