மேலும் செய்திகள்
அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்த வாய்ப்பு
04-Jul-2025
புதுச்சேரி: தீபாவளிக்காக தற்காலிக பட்டாசு கடை வைக்க வரும் ஆக.21ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கலெக்டர் குலோத் துங்கன் விடுத்துள்ள செய்தி குறிப்பு; எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புவோர் அதற்கான விண்ணப்பங்களை https://swscollectorate.py.gov.in/ என்ற இணையதள முகவரியில், வரும் ஆக.21ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். எக்காரணத்தைக் கொண்டும் தேதி நீட்டிக்கப்படாது. விண்ணப்பத்துடன், பட்டாசு விற்பனை செய்ய உள்ள இடத்தின் வரை படம், வரைபடத்தில் கடை யில் பட்டாசு வைத்துக் கொள்ளும் அளவு, கடைக்கு செல்வதற்குரிய வழி மற்றும் சுற்றியுள்ள சாலைகள், கடையைச் சுற்றி 15 மீட்டர் சுற்றளவில் உள்ள பிறக்கடைகள் பற்றியும் குறிப்பிட வேண்டும். இடத்தின் உரிமை தொடர் பான பத்திரங்கள், வாடகை இடமாக மற்றும் கடையாக இருப்பின் வாடகை பத்திரம் பட்டாசு கடை வைக்க உரிமையாளரின் ஆட்சேபனை இல்லை என்ற நோட்டரி பத்திரம் மற்றும் மின் ரசீது மற்றும் தண்ணீர் ரசீது. முகவரி மற்றும் அடையாள சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
04-Jul-2025