உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வரதராஜ பெருமாள் கோவிலில் நிர்வாக அதிகாரி நியமனம்

வரதராஜ பெருமாள் கோவிலில் நிர்வாக அதிகாரி நியமனம்

புதுச்சேரி: திருபுவனை தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் புதிய நிர்வாக அதிகாரியாக செந்தில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.திருபுவனை பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த, தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் புதிய நிர்வாக அதிகாரியாக, தலைமை ஆசிரியர் செந்தில்குமார் இந்து அறநிலையத்துறையால் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் திருபுவனை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா தலைமையில், முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து, அதற்கான பணி ஆணையை பெற்றார். இந்து அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன், திருபுவனை தொகுதி ஊர் பிரமுகர்கள் லட்சுமி, செல்வம், தனசேகர், பாலு, வேல்முருகன், பிரசாந்த், வெங்கடேஷ், லட்சுமண பெருமாள், புகழ் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதைத்தொடர்ந்து நடந்த, கோவில் நிர்வாக அதிகாரி பதவியேற்பு விழாவில் மங்களம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., சுகுமாறன், என்.ஆர் காங்., பிரமுகர்கள், ஊர் பிரமுகர்கள், விழா குழுவினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை